திருமூலர் தமிழ் சித்தர் மரபில் மிக முக்கியமான சித்தரான அவர், தனது திருமந்திரம் என்னும் நூலின் மூலம் ஆன்மிகமும் தத்துவமும் கலந்த கருத்துகளை நமக்கு வழங்கியுள்ளார்.
திருமூலர் சைவ சித்தர் மரபில் ஒருவர், இவர் தென் இந்தியாவில் பசுபதர் வழிபாட்டு முறையைப் பின்பற்றி, ஆன்மீகப் பயணத்தில் பெரிய புரட்சியாளராக விளங்கியவர்.
திருமந்திரம்:
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
தன்னை அறிந்துகொண்டால்தான் ஆண்டவனை அறியமுடியும். நான் யார்? என்ற கேள்வியால்தான் அவன் யார் என்பதை உணரமுடியும். ஆகவே, தன்னை முழுதும் அறிந்து கொள்ள சொல்கிறார் திருமூலர்
காவிரிக்கரையில் நிகழ்ந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சி திருமூலரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது
காவிரிக் கரையிலுள்ள நந்தவனத்தில் பசுக் கூட்டங்கள் அழுவதைக் கண்டார். .திருமூலர் அரவம் தீண்டி உயிரிழந்த மூலன் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட திருமூலர். இறந்த இடையன் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், திருமூலர் பசுக்களின் துயரத்தைக் கண்டு மிகுந்த கவலையடைந்தார். “இந்த இடையன் உயிர்ப்பெற்றெழுந்தால்தான் இந்த பசுக்கள் துயரத்திலிருந்து மீள முடியும்” என்று அவர் நினைத்தார். திருமூலர், தம்முடைய இயல்பான திவ்ய மெய்யை பாதுகாப்பாக வைத்துவிட்டு, மூலனின் உடலில் நுழைந்து அவர் உடலை உயிருடன் எழுப்பினார். அவர் பரகாயப்பிரவேசம் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை (தன்னுடைய உயிரை மற்றோர் உடம்பில் அனுப்புதல்) என்னும் யோக மரபினை பின்பற்றினார். இதன் மூலம், பசுக்களின் துயரம் தீர்ந்து பசுக் கூட்டங்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின.அன்றைய மாலைப்பொழுதின் சூழலில், பசுக்கள் தங்கள் கன்றுகளைக் காண்பதற்காக மெதுவாக வீடு திரும்புகின்றன.அவற்றை பின்தொடர்ந்து, பசுக்கள் தங்களுடைய வீடுகளுக்கு வந்து சேர்ந்ததும், அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.மூலனின் மனைவி திருமூலர் நின்றதை பார்த்து அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
மூலனுடைய மனைவி, தனது கணவனின் உடல் மற்றும் மன நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்துகொண்டு,மூலனுக்கு ஏதோ புத்தி பேதலித்து விட்டது என்று நினைத்துக் கொண்டாள். திருமூலர் அங்கிருந்து கிளம்பும் முன்பாக அவரை பின்தொடர்ந்து சென்று மூலன் திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் ஒரு யோக நிலை இருப்பதைக் கண்டு அஞ்சி மூலனை இயல்பு நிலைக்கு திரும்பி வந்து தனுடன் வாழ்மாறு கட்டாயப்படுத்தினால் ஆனால், தன்னைத் தேடும் மனைவியை , திருமூலர் தன்னைத் தீண்டுவதற்கு அருகில் வருவதைத் தடுத்துநிறுத்தினார் .
திருமூலர் சொன்ன வார்த்தையைக் கேட்டு மூலனுடைய மனைவி பெரும் துன்பப்பட்டால் மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தினாள் ஆனால் திருமூலரோ உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்னை விட்டு விலகிச் செல் என்று கூறி அவர் தியானத்தில் மூழ்கினார் தனது கணவனின் நிலை மாறி இருப்பதைக் கண்ட மூலனுடைய மனைவி தூங்காமல் விடியும் வரை துயரூற்று காத்திருந்தாள் பொழுது விடிந்ததும் அந்த ஊர் மக்களிடமும் ஊர் தலைவர்களும் சென்று எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மன்றாடினால்.
அதை கேட்ட சான்றோர் திருமூலரிடம் சென்று அவரது நிலையை ஆராய்ந்து, இது பித்தினாள் ஏற்பட்ட மயக்கம் அல்ல, பேய் பிடித்தல் போன்ற பிற காரணங்களால் உண்டானதும் இல்லை. சித்த விகாரங்களின் கலக்கங்களை முற்றிலும் நீக்கி, தெளிவாக சிவயோகத்தில் முழுகியவராக இவர் உள்ளார். அவரது நிலை யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உயர்ந்த ஒன்றாகும் என்று கூறினர்.
அவ்வாறு அவர்கள் தெளிவுபடுத்தி, “இவர் உலகியலான உறவுகள் மற்றும் ஆன்மிக பற்றுகள் ஆகிய இரண்டையும் விலக்கி, பரமனுடைய திருவடிகளை அடைந்த சீவன் முத்தராக இருக்கிறார். இவர் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் தெளிவாக அறிய கூடிய முற்றுணர்வுடையவராக விளங்குகிறார். எனவே, முன்பிருந்த வாழ்க்கை நிலைக்கு அவர் மீண்டும் திரும்ப மாட்டார்; உங்கள் சுற்றத்திற்கும் உறவுக்கும் ஈடுபடுவார் அல்லர்” என்று திருமூலரின் மனைவியிடம் கூறினர்.
இதைக் கேட்ட மனைவி அளவிலாத துயரத்தால் மயங்கி விழுந்தாள். அருகிலிருந்தவர்கள் அவளைக் தேற்றி, சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.இதனை முற்றுணர்வுடன் புரிந்த திருமூலர், தம்மை பின்தொடர்ந்த ஆயர்குலத்தவரிடம் தமக்குச் எந்தவிதமான தொடர்பும்
இல்லையென்பதை விளக்கினார். அவர்கள் திரும்பிய பிறகு, சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்.
திருமூலர் சாத்தனூரின் பொதுமடத்தில் சிவயோக நிலையில் இருந்தபோது, யோக நிலை கலைந்து எழுந்த அவர், தன் முந்தைய உடம்பு இருந்த இடத்தை தேடி சென்றார். ஆனால் அங்கு தனது உடம்பை காணவில்லை. அதனால், அந்த நிகழ்வு குறித்து ஆழ்ந்த சிந்தனையில் ஆராய்ந்து தெளிவடைந்தார்.
இறைவன், அனைத்து உயிர்களிடமும் கொண்ட பேரருளின் காரணமாக, திருமூலரின் மூலம் தமிழ் மொழியில் சிவாகமங்களின் அருமையான கருத்துகளைப் பிரபவிக்கச் செய்தார். இதற்காக, அவரது முந்தைய உடம்பை மறைத்தருளி, அவரை ஒரு புதிய புனித பயணத்திற்கு அனுப்பினார்.
திருமூலர் சித்தர் மற்றும் வீரசேனன் சம்பவம் – பாண்டிய நாட்டில் ராஜேந்திரபுரி என்ற பகுதி இருந்தது.அப்பகுதியை வீரசேனன் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு குணவதி என்ற மனைவி அமைந்தாள். இருவரும் அன்பில் சிறந்து விளங்கினர். அரசசபையிலும் கூட இவர்கள் இணைந்து அமர்வது வழக்கம். நகர்வலம் செல்லும் நேரங்களில் மட்டுமே வீரசேனன் தன் மனைவியைவிட்டு பிரிந்து, அவளை அரண்மனையில் விட்டுச் செல்வான்.
ஒருநாள் இரவில், வீரசேனன் மாறுவேடம் தரித்து நகர்வலம் சென்றபோது, திரும்பி வந்து அந்தப்புரத்துக்கு சென்றவனுக்கு அரவம் தீண்டிய பூவை முகர்ந்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டது. வாயில் நுரைதள்ளி உயிரை இழந்தான். குணவதியின் கதறலோடு அரண்மனையெல்லாம் சோகமயமானது.
அப்போது வானத்தில் பறந்து சென்ற திருமூலர் சித்தர் இதைக் கேட்டு, தம்பதியரின் அன்பை நினைத்தார். குணவதியின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர, உடனே சதுரகிரி மலையில் உள்ளகுகையில் தனது உடலை கிடைத்துவிட்டு சூட்சும உருவெடுத்து மீண்டும் கூடு விட்டு கூடு பாய்ந்து திருமூலர் வீரசேனனின் உடலில் தன் உயிரை செலுத்தி, அவரது வாழ்க்கையை மீட்டார். மன்னன் உயிருடன் மீண்டதைக் கண்ட மக்களும் மகாராணியும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், மன்னனின் உடலில் வாழ்ந்து கொண்டிருந்த திருமூலர், முந்தைய வீரசேனனின் பழக்கவழக்கங்களிலிருந்து விலகி, தத்துவங்களைப் பேசத் தொடங்கினார். இது குணவதியின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒருநாள் குணவதி நேராகவே கேட்க, திருமூலர் உண்மையை வெளிப்படுத்தினார். “நான் உன் கணவன் வீரசேனன் இல்லை. நான் திருமூலர் சித்தன். உன் கணவனின் மரணத்தால் நீயும் மக்கள் துயரத்தில் இருந்ததைப் பார்த்து, அவனின் உடலில் உயிர் புகுந்தேன்,” என்றார்.
இதை கேட்ட குணவதி, திருமூலரின் ஒழுக்கத்தைப் பாராட்டி, “நீங்கள் நாட்டை ஆளுங்கள்” என சம்மதித்தார். ஆனால், திருமூலரின் உண்மையான உடலை அழிக்க வஞ்சகமாக திட்டமிட்டார்.
திருமூலரின் உடலை எரிக்க வேலையாட்களை அனுப்பிய குணவதியின் திட்டம் செயல்பட, திருமூலர் இதை அறிந்தபின், அவரிடம் குற்றம் சொன்னதில்லை. மாறாக, அவர் விரும்பியபடி, “நித்ய சுமங்கலிதனம்” என்ற வரத்தை வழங்கி, வீரசேனனின் உடலை விட்டு விலகினார்.
பின்னர், திருமூலர் தன் ஆன்மிக சேவையைத் தொடரத் திருவானைக்காவல் சென்று, யோகநிலையிலிருந்து திருவாவடுதுறையில் சமாதியாகினார்.
திருமூலரின் பாடம்:
இக்கதையின் மூலம் திருமூலர், உயிர்களுக்கு உதவிக்கரமாக இருப்பதின் அவசியத்தை மட்டும் இல்லை, ஒழுக்கம், தன்னலமின்மை, மற்றும் தத்துவ உணர்வின் உயர்வையும் உலகுக்கு கற்பிக்கிறார்.
திருமூலர் திருவாவடுதுறையிலுள்ள திருக்கோயிலுக்கு சென்று, அங்கு அம்மையப்பராக அருள்பாலிக்கின்ற இறைவனை வணங்கினார். திருக்கோயிலின் மேற்கே உள்ள அரசமரத்தின் கீழ் உள்ள தேவாசனத்தில், சிவபுரம் பொருளுடன் ஐக்கியமாகிய அவர், சிவயோகத்தில் அமர்ந்தார். இதன் மூலம், தன்னை பரம்பொருளுடன் இணைந்த நிலைக்கு உயர்த்தினார்.
திருமூலநாயனார், சிவயோக நிலையில் அமர்ந்திருந்தபோது, இப்பிறவியின் உடல் சம்பந்தமான துயரங்களை மற்றும் தீய நஞ்சினால் ஏற்படும் துன்பங்களைத் தாண்டி, முழுமையான ஆன்மிக நிலையை அடைந்தார். அவர் தனது அருளால் இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு, சிவபெருமான் அருளை அடைய நால்வகை நன்னெறிகளை உரைத்தார்.
அவை, சரியையெனப்படும் வாழ்க்கை நெறி, கிரியையெனப்படும் கடவுள் வழிபாடு, யோகமெனப்படும் மனஅமைதி மற்றும் ஞானமெனப்படும் தெய்வ உணர்வு ஆகியவை. இந்த நெறிகள், நால்வகை மலர்களைப் போல விரிந்தும் விளங்கியும், இறைவனை அடையும் மார்க்கங்களாக அமைந்தன.
திருமூலநாயனார், இந்த நன்னெறிகளை அழகாக தொகுத்து, திருமந்திரம் எனும் முப்பத்தாறு மாலைகள் கொண்ட புனித நூலாக உருவாக்கினார். இதனை இறைவன் திருவடிக்கு சமர்ப்பித்து, அவனை போற்றும் மகா பொருளாக நமக்கு அளித்தார்.
திருமந்திரம், இன்றும் ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மனிதரின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக செயல்படுகிறது. அதன் ஒவ்வொரு சொற்களும், இறைவனை உணர துளிகூட துலங்கும் பொற்கொடியை ஒத்ததாக உள்ளது. இது நம் அனைவருக்கும் முழுமையான ஆன்மிக வளர்ச்சியை தரும் வழிகாட்டியாக
திருமூலரின் ஆன்மிக சாதனையும் திருப்பாடல்களும் ஆழ்ந்த பொருளுடனும் உயிர்த்த மனித வாழ்வின் நோக்கத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்” எனத் தொடங்கும் அவரது பாடல், பரம்பொருளின் மகத்துவத்தையும் ஆன்மிக உண்மைகளையும் சுவடாக நிரூபிக்கிறது.
திருமூலர், சிவயோக நிலையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்தும் பாடி, மொத்தம் மூவாயிரம் திருப்பாடல்களை அருளிச்செய்தார். அவற்றில் திருமூலர் தனது ஆன்மிக சாதனை மூலம், “அன்பும் சிவமும்” என்ற மெய்ப்பொருளை உலகிற்கு வெளிப்படுத்தியவர். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” எனும் அவரின் வரிகள், அன்பின் முழு தன்மைவே சிவமாகும் என்பதைக் கூறுகின்றன. அறிவில்லாதவர்கள் அதனை இரண்டாகப் பார்க்கலாம்; ஆனால் உண்மையான ஆன்மிக அறிவின் மூலம், அன்பே சிவமாகும் என்ற பெரு உண்மையை உணரலாம்.
திருமூலரின் வாழ்வும் ஆக்கங்களும் இன்றும் நமக்கு வழிகாட்டியாக, சிவயோகத்தின் தூய தன்மையையும் பேரின்ப வாழ்க்கையின் உயரிய இலட்சியத்தையும் உணர்த்துகின்றன. திருமந்திரம் என்றும் அழியாத பொக்கிஷமாக தமிழினம் மற்றும் ஆன்மிக உலகிற்கு பெருமை சேர்க்கிறது.
- அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.
- ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார்.
திருமூலரின் வரலாற்றை சிறப்பாக சுருக்கி நம்பியாண்டார் நம்பிகள் “திருத்தொண்டர் திருவந்தாதி” எனும் திருமுறைப் பாடலில் குறிப்பிடுகிறார்.
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே”
என்று திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்
குறிப்பிட்ட இந்த பாடல், திருமூலரின் பெருமைகளை விளக்குகிறது:
- குடிமன்னு சாத்தனூர்: திருமூலர் சாத்தனூர் பகுதியில் பிறந்தவர் என்கிறார்.
- கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு: திருமூலர் திருக்கயிலைக்கு சென்று நந்தி பகவானின் வழிகாட்டுதலால் பாடல்களை அருளிச் செய்தார்.
- முடிமன்னு கூனற் பிறையாளன்: திருமூலர் சாத்தனூரில் இயல்பான மனிதராக இருந்தாலும், அவர் தெய்வீக ஞானம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.
- முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படியே: திருமூலரின் பாடல்கள் வேதங்களின் உண்மையை முழு தமிழிலும் விளக்குகின்றன.
- அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே: சிவபெருமான் திருமூலருக்கு அருள் நல்கி, அவரின் மூலம் நாயகமாக விளங்கினார்.
- இந்த வரிகளைத் திருமூலரின் தெய்வீக வாழ்க்கை மற்றும் அவரின் சாதனைகள் திருத்தொண்டர்கள் மனதில் ஊற்றப்படுவதை நம்பியாண்டார் நம்பிகள் சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.
- திருமந்திரம் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான ஒற்றுமையை விளக்கும் நூல்.
- திருமந்திரம் பரமனின் அருள் யோகத்தின் மூலம் கிடைக்கும் என்று கூறுகிறது.
திருமூலர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன நூல்களின் தொகுப்பு
திருமூலர் காவியம் 800 தீட்சை விதி 18
சிற்பநூல் 1000 சல்லியம் 1000
சோதிடம் 300
மாந்திரீகம் 600
வைத்தியச் சுருக்கம் 200
சூக்கும ஞானம் 100
பெருங்காவியம் 1500
யோக ஞானம் 16
காவியம் 1000
தீட்சை விதி 100
ஆறாதாரம் 64
கருங்கிடை 600
கோர்வை விதி 16
பச்சை நூல் 24
விதி நூல் 24
திருமந்திரம் 3000
திருமூலரின் முக்கிய படைப்பு திருமந்திரம், 3000 பாடல்களைக் கொண்ட ஒரு மாபெரும் ஆன்மிக நூல்.
ஓம் நமசிவாய,ஓம் திருமுல சித்தாய நமக.
Dr.yuvaraja simha
Anandhayogi